எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணியைத் தொடர்ந்து அடுத்தும் கொங்கு மண்டலத்தில் தான் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ரெய்டு நடவடிக்கை இருக்கும் என அதிமுகவிலேயே ஆருடம் சொல்கிறார்கள். கொங்கு விஐபி-க்கள் மீது ஊழல் நடவடிக்கைகளைப் பாய்ச்சி ஈபிஎஸ்ஸின் பலத்தை பதம்பார்ப்பதுதான் திமுகவின் தொலைநோக்குத் திட்டமாம். இந்த ரெய்டு நடவடிக்கைகளால் ஈபிஎஸ் துடித்துக் கொண்டிருக்க, ஓபிஎஸ் வட்டாரமோ உள்ளுக்குள் ரசிக்கிறதாம். அதேசமயம், கட்சிக்குள் கவுண்டர்கள் முகாம் கலகலக்கும் இந்த சமயத்தில், தனது விசுவாசி ஒருவரை கட்சியின் அவைத் தலைவராக உட்காரவைத்துவிட வேண்டும் என துடிக்கிறாராம் ஓபிஎஸ். செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் - இவர்களில் ஒருவர் ஓபிஎஸ்ஸின் அவைத் தலைவர் சாய்ஸ் என்கிறார்கள். ஈபிஎஸ் தரப்பிலோ, ஓபிஎஸ்ஸை அவைத் தலைவராக்கி ஓரங்கட்டிவிட்டு, ஈபிஎஸ்ஸின் ஒற்றைத் தலைமையின்கீழ் கட்சியைக் கொண்டு வந்தால் என்ன என அதிரடி ஆலோசனை நடக்கிறதாம்.