அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு நடவடிக்கை குறித்து இதுவரை பாஜக தலைமை எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ரெய்டு நடவடிக்கை குறித்து பாஜகவின் மகளிர் அணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் காட்டமான கண்டன அறிக்கை வெளியிட்டார். தேர்தலில் வானதியை ஜெயிக்கவைத்ததில் வேலுமணியின் ‘பெரும்பங்கு’ இருக்கிறது. அதற்கு நன்றிக்கடனாகவே கண்டன அறிக்கை கொடுத்தாராம் வானதி. அதுவும் வேலுமணியே போனில் அழைத்து வருத்தப்பட்ட பிறகு, மறுநாள் வானதியின் அறிக்கை வெளியானது. இந்த நிலையில், “தன்னை ஜெயிக்கவைத்தார் என்பதற்காக வேலுமணி தவறே செய்யாதது போல் வானதி அறிக்கை வெளியிட்டு விசுவாசத்தைக் காட்டியதெல்லாம் ரொம்பவே ஓவர்” என்று பாஜகவுக்குள்ளேயே சிலர் பகடி செய்கிறார்கள்.