ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்றுவது ஏன்?

By காமதேனு

ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பதிவாகி இருக்கும் 16 பக்க எஃப்ஐஆரில், கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் நடந்த ஒப்பந்தப் பணிகளில் சுமார் 811 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப் பணிகளில் எவ்வித கையெழுத்தும் போட்டு ஒப்புதல் வழங்காத வேலுமணியின் பெயரைக் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்திருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், எஃப்ஐஆரின் 7-ம் பக்கத்தில் இரண்டாம் பத்தியில், அடையாளம் தெரியாத அதிகாரிகள் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது இப்போது கோட்டை வட்டாரத்தில் பெரும் புகைச்சலைக் கிளப்பி இருக்கிறது. “ஊழல் எப்போது நடந்தது, அப்போது அதிகாரிகளாக இருந்தவர்கள் யார் என்ற விவரங்கள் எல்லாம் தெள்ளத் தெளிவாக இருக்கும் போது ஊழல் அதிகாரிகளின் பெயர்களையும் எஃப்ஐஆரில் குறிப்பிட வேண்டியதுதானே. வெளிப்படையான நிர்வாகம் நடத்தப் போவதாகச் சொல்லும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் ஊழல் அதிகாரிகளின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் கோட்டையில் இருக்கும் சில நியாயவான்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE