ஆளும் கட்சியினரை ஆதரிக்க ஆளில்லை!

By காமதேனு

மேட்டுப்பாளையம் தொகுதிக்குள் திமுக முன்னாள் எம்எல்ஏ-வான அருண்குமார், புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் ஆளாளாளுக்கு வெறுப்பில் இருக்கிறார்கள். இதனால் அங்கே திமுகவினரின் துயர் துடைக்க ஆளே இல்லையாம். இவர்கள் தான் இப்படி என்றால், தொகுதி எம்பி-யான ஆ.ராசாவும் இப்போது தொகுதிப் பக்கம் தலைகாட்டுவதில்லை. தேர்தல் நேரத்தில் எடப்பாடியாரின் தாயைப் பற்றிய அவரது பேச்சு விவகாரமானது ஒருபக்கம் என்றால், தனது மனைவி பரமேஸ்வரியின் இழப்பாலும் பெரிதும் பாதிக்கப்பட்டார் ராசா. இதனால் பொதுவாகவே எந்த நிகழ்ச்சியிலும் அவர் அதிகம் தலைகாட்டுவதில்லை. இதையெல்லாம் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட மேட்டுப்பாளையம் அதிமுக எம்எல்ஏ-வான செல்வராஜும், முன்னாள் எம்எல்ஏ-வான சின்ராஜும் தொகுதிக்குள் திரும்பிய பக்கமெல்லாம் தலையைக்காட்டி, இன்னமும் அதிமுக ஆட்சி நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.
 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE