செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலமாக ஆண்டு தோறும் தமிழறிஞர்களுக்கு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட ‘கலைஞர் மு.கருணாநிதி விருது’ வழங்கப்படுகிறது. ஆனால், அதிமுக ஆட்சி நடந்த கடந்த 10 ஆண்டுகளில் இந்த விருது அறிவிக்கப்படாமலேயே இருந்தது. ஸ்டாலின் முதல்வரானதும் விருதுக்கான தேர்வுக் குழு அமைக்கப்பட்டு விருதாளர் பட்டியலும் ரெடியாகி விட்டது. ஆனாலும், கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி தான் விழா நடத்தி விருதாளர்களை கவுரவிக்க வேண்டும் என்பது விதியாம். இதனால் உடனடியாக விருதாளர்கள் பட்டியலை அறிவிக்க முடியாத இக்கட்டில் இருக்கும் முதல்வர், இந்த ஒரு வருடம் மட்டும் விதிகளைத் தளர்த்தி விழாவை நடத்தி விடலாமா என ஆலோசனை நடத்தி வருகிறாராம்.