அமைச்சர் கே.என்.நேருவைப் போலவே, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் கட்சியினரிடம் கூடுதல் உரிமை எடுத்துக்கொண்டு, கொஞ்சம் கடுகடுப்பாகவே பேசுவார். ஆனால், அதே கடுகடுப்பை தங்கள் முன்னிலையிலும் காட்டவேண்டுமா என ஆதங்கப்படுகிறார்கள் விவசாயிகள். அண்மையில் வேளாண் பட்ஜெட் தொடர்பாக தன்னைச் சந்திக்க வந்திருந்த விவசாயிகள் சிலரை வைத்துக்கொண்டே அருகிலிருந்தவரை, கெட்ட வார்த்தைகளில் கண்டபடி பொழிந்தாராம் அமைச்சர். இதைக் கேட்ட விவசாயிகள், வசவு அவருக்கா தங்களுக்கா என தெரியாமல் குழம்பிப் போய், வந்த வேலையை அவசர அவசரமாய் முடித்துவிட்டு பச்சைத் துண்டால் காதைப் பொத்திக் கொண்டு வெளியில் வந்தார்களாம். வகிக்கும் பதவிக்காவது கொஞ்சம் மரியாதை கொடுங்கள் மாண்புமிகு அமைச்சரே!