மார்க்சிஸ்ட் கட்சியில் தனிநபர் துதி இருக்காது. சித்தாந்தத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் கேரளத்தில் இதையெல்லாம் தகர்த்து, முதல்வர் பினராயி விஜயனுக்கு பேனர் வைத்து தனிநபர் துதியை துவக்கிவைத்திருக்கிறார்கள் சேட்டன்கள். மலப்புரம் விஷ்ணு கோயிலின் முன்பு தோழர்கள் வைத்திருக்கும் பேனரில் பினராயி விஜயனை ‘கேரளத்தின் கடவுள்’ என விளித்திருக்கிறார்கள். அதன் உள்ளே, ‘யார் மக்களுக்கு உணவிடுகிறார்களோ அவரே கடவுள்’ என மலையாளத்தில் விளக்கமும் எழுதப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை இடதுசாரிகள் தங்களுக்குள் விவாதித்திக் கொண்டிருந்த நிலையில், ‘கேரளத்தின் கடவுள் என பினராயி விஜயனின் படத்தை தேவாலய வாசலிலோ, மசூதி வாசலிலோ வைக்க முடியுமா?’ என பாஜகவினர் பொதுவெளியில் விவாதத்தைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.