திமுக துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு, அதிக முக்கியத்துவம் இல்லாத கூட்டுறவுத் துறையை ஒதுக்கியதில் ஆரம்பத்திலிருந்தே புகைச்சல் இருக்கிறது. அமைச்சரவைப் பட்டியல் வெளியானதும் ஸ்டாலினைச் சந்தித்துக் கண்கலங்கிய ஐ.பெரியசாமி, “என்னைய செல்லூர் ராஜூ மாதிரி ஆக்கிட்டீங்கன்னு தமிழ்நாடே பேசுது” என்றாராம். அப்போதைக்கு ஐபியை கையெடுத்துக் கும்பிட்டு சமாதானப்படுத்திய ஸ்டாலின், “மூன்றே மாதத்தில் உங்களது மனக்குறை சரிசெய்யப்படும்” என்று சொன்னாராம். அண்மையில் ஐபிக்கு இதை நினைவூட்டிய ஸ்டாலின் குடும்பத்தினர், “நம்பிக்கையோடு இருங்கள்... சொன்னது நடக்கும்” என்று உறுதி கொடுத்தார்களாம். இதையடுத்து சீக்கிரமே அண்ணனுக்கு கூடுதல் இலாகா பொறுப்புகள் வரலாம் என ஐபி முகாம் ஆனந்தத் துள்ளலில் இருக்கிறது.