புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ரகுபதியும் மெய்யநாதனும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இவர்களைத் தவிர புதுக்கோட்டை எம்எல்ஏ-வான முத்துராஜாவும் அமைச்சர் ரேஞ்சுக்கு அதிகாரம் செலுத்துகிறாராம். தனது தொகுதியில் எந்த கான்ட்ராக்டாக இருந்தாலும் தன்னைக் கேட்காமல் கொடுக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு தடா போடும் முத்துராஜா, அண்மையில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஒன்றை தனக்கு வேண்டப்பட்டவருக்கு வழங்க வைத்துவிட்டாராம். இதனால் கொந்தளித்த மாவட்ட அமைச்சர்கள், விஷயத்தை திமுக தலைமை வரைக்கும் கொண்டு போய் முறையிட்டார்களாம். இதையடுத்து அந்த டெண்டரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டதாம் தலைமை.