வங்கத்தில் சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கு மதுரை மாவட்ட தலைவர் நான் தான் என கிளம்பியிருக்கும் கல்யாண், திரும்பும் திசையெங்கும் ‘வருங்கால பாரத பிரதமர் மம்தா அம்மா’ என்று சுவர் விளம்பரங்களை வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். “அம்மாவுக்கு ஜனவரி 5 தானே பிறந்தநாள்... இப்பவே கலக்குறீங்களே” என அவரைக் கேட்டால், “மதுரை மேயர் சீட் கேட்டிருக்கிறேன். அதுக்கு ஒரு அறிமுகம் வேண்டாமா?” என்று அலட்டிக்காமல் சொல்கிறார் கல்யாண். “அதெல்லாம் சரி, மம்தாவை தீதின்னு தானே சொல்வாங்க... நீங்க என்ன அம்மாவாக்கிட்டீங்க?” என்றால், “நம்ம பக்கமெல்லாம் அம்மான்னு சொன்னா தானே தலைவா எடுபடும்” என்று சிரிக்காமல் சீரியஸாய் சொல்கிறார் கல்யாண்.