அது போன மாசம்...  இது இந்த மாசம்!

By காமதேனு

தளவாய் சுந்தரத்தின் உதவியாளராகவும் தோவாளை ஒன்றிய அதிமுக செயலாளராகவும் இருந்தவர் கிருஷ்ணகுமார். ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியதால், அதிமுக ஆட்யிலேயே கிருஷ்ணகுமாரின் பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு, ஆளும் கட்சியின் கமிஷன் கணக்கு குறித்து வாட்ஸ் - அப் குரூப்பில் கிருஷ்ணகுமார் புள்ளி விவரத்தோடு பேசிய ஆடியோ ஒன்றும் வைரலானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது இதையும், கிருஷ்ணகுமார் பெயரைக் குறிப்பிட்டும் கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின். இதற்கிடையில் அதிமுகவிலிருந்தே நீக்கப்பட்டார் கிருஷ்ணகுமார். அப்படிப்பட்டவரை புனிதராக்கி இப்போது திமுகவில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.  “என்னங்க இப்டி..?” என்று குமரி திமுகவினரைக் கேட்டால், “அது போன மாசம்... இது இந்த மாசம்” என்று சிரிக்கிறார்கள்.
 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE