வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அண்ணாச்சி சொந்த ஊருக்கு வந்தாலே, கட்சிக்காரர்கள் கோரிக்கை மனுக்களோடு வந்து குவிகிறார்களாம். அவர்களிடம் ஜாலியாகப் பேசும் அண்ணாச்சி, “சும்மா... பெட்டிஷனா கொண்டாந்து நீட்டிக்கிட்டு இருக்காம பெரிய வேலையா ஏதாச்சும் இருந்தா கொண்டாங்கப்பா... நமக்கும் கடன் கப்பி நிறைய இருக்குல்ல” என்று கலாய்க்கிறாராம்.