புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த முறை முதல்வராக இருந்தபோது 4 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்தார். அதை நம்பி இப்போதும், அவர் எங்கு சென்றாலும் இளைஞர் பட்டாளம் வேலை கேட்டு மனுக்களை நீட்டுகிறதாம். ஆனால், பாஜக கொடுக்கும் நெருக்கடியில் தனது பதவியே தப்புமா என்ற நிலையில் இருக்கும் ரங்கசாமி, மனு கொடுக்கும் இளைஞர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திணறுகிறாராம்.