உபியில் பதவி இழக்கும் பாஜகவினர்

By காமதேனு

உபியில், மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் அமலானால் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள பாஜகவினர் பலரின் பதவிக்கு ஆபத்து வரலாம் என்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதே இதற்குக் காரணம். இந்த சட்டத்தால் பாஜக மேயர்கள் பலரும் பதவியிழக்க வேண்டி வரலாம் என்பதால், சட்டத்துக்கு எதிர்த்து கட்சிக்குள் கலகம் பிறந்திருக் கிறதாம். அதேசமயம், இளம் தலைமுறையினருக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைக்கும் என்று சொல்லி சட்டத்துக்கு ஆதரவாகவும் கட்சிக்குள் குரல்கள் ஒலிக்கின்றன.
 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE