மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, பதவி விலகி வழிவிட்ட 12 பேரில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முக்கியமானவர். பிஹாரைச் சேர்ந்த இவர் பாஜகவுக்கான தமிழக பொறுப்பாளராகவும் இருந்தவர் என்பதால், தமிழக ஆளுநர் பொறுப்பை வழங்க பிரதமர் மோடியே முன்மொழிந்தாராம். ஆனால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பல முக்கிய வழக்குகளில் வாதாடிய அனுபவம் கொண்ட ரவிசங்கர், அந்த வருமானத் தையும் புகழையும் இழந்து ஆளுநர் என்ற குறுகிய வட்டத்துக்குள் முடங்க விரும்பவில்லையாம். எனினும் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க பாஜக தலைமை ஆலோசித்து வருகிறதாம்.