“திமுக ஆட்சிக்கு வரவே வராது” என்று சொல்லிக் கொண்டிருந்த மு.க.அழகிரி, தேர்தல் சமயத்தில் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அடக்கியே வாசித்தார். அதற்குக் காரணம், “நல்லதே நடக்கும்... நம்பிக்கையோடு இருங்கள்” என்று அன்புச் சகோதரி செல்வி கொடுத்திருந்த உத்தரவாதம்தானாம். இதையடுத்து தேர்தலில் திமுக வென்றதும், “தம்பி ஸ்டாலின் நல்லாட்சி தருவார்” என்று திருவாய் மலர்ந்தார் அழகிரி. இதன் தொடர் நிகழ்வாக, அழகிரியின் மகன் துரை தயாநிதியை முரசொலி அறக்கட்டளையில் சேர்க்க ஸ்டாலினிடம் சிபாரிசு செய்தாராம் செல்வி. அவரும் அதற்கு இசைவு தெரிவித்திருந்த நிலையில், கிச்சன் கேபினெட்டில் இருந்து பாஸிட்டிவான பதில் வரவில்லையாம். இதனால் இந்த விவகாரம் இழுபறியில் நிற்கிறது.