சைலேந்திரபாபு தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றதும், அவரது சொந்த மாவட்டமான கன்னியாகுமரியிலிருந்து ஓயாத வாழ்த்து மழையாம். கல்வி நிறுவனங்கள் தொடங்கி வர்த்தக நிறுவனங்கள் வரை ஆளாளுக்கு நாளிதழ்களில் பக்கத்துக்குப் பக்கம் விளம்பரம் கொடுத்தார்கள். டிஜிபியும் நாங்களும் ரொம்பவே நெருக்கம் என்பது போலும் சிலர் விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். இப்படியான விளம்பரங்கள் லோக்கல் போலீஸாரின் கைகளை கட்டிவிடக்கூடாதே என்று சுதாரித்த சைலேந்திரபாபு, தனக்காக யாரும் வாழ்த்து விளம்பரங்கள் தந்தால் பிரசுரிக்க வேண்டாம் என முன்னணி பத்திரிகையாளர்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டாராம். அத்துடன் அத்தகைய விளம்பரங்களை யாரும் தராமல் பார்த்துக் கொள்ளுமாறு மாவட்ட காவல் துறையையும் வலியுறுத்தினாராம்.