ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக கட்சியிலும் ஆட்சியிலும் பிரதானப்படுத்தப்படுகிறார் உதயநிதி ஸ்டாலின். கட்சியின் அடுத்த தலைவர் லெவலுக்கு இப்போதே அவர் வேகமாக வார்த்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், கைவசம் மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாராம் உதயநிதி. இந்த மூன்று படங்களுக்குப் பிறகு, சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியல்வாதி அவதாரம் எடுக்கப் போகிறாராம் உதயா. அநேகமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் படம் தான் உதயநிதியின் கடைசிப் படமாக இருக்கும் என்கிறார்கள்.