பிஸியாவே இருந்தவரு பின்ன என்ன செய்வாரு?

By காமதேனு

மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் அருகே ஜெயலலிதாவுக்காக, தான் கட்டிய ‘அம்மா கோயிலில்’ இந்த கரோனா காலத்திலும் வாரத்தில் மூன்று நாட்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்தி விடுகிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அப்போதெல்லாம், “சட்ட மன்றத்தில் பேச வாய்ப்பில்லாததால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்” என்று சொல்லி நீட்டி முழக்குகிறாராம் மனிதர். தட்டமுடியாமல் இந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் ரத்தத்தின் ரத்தங்கள், “எந்நேரமும் பிஸியாவே இருந்தவர சும்மா இருன்னா எப்படி இருக்க முடியும்? அதான் சும்மா ‘வெளுத்து’ வாங்குறாரு” என்று சிலேடையாய் பேசிச் சிரிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE