கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் திமுக மொத்தமாக பறிகொடுத்திருக்கும் நிலையில், தோல்விக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து களையெடுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டது தலைமை. அதன்படி, கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான தென்றல் செல்வராஜ் நீக்கப்பட்டு, தேர்தலில் தோற்ற கி.வரதராஜனை அந்தப் பொறுப்பில் நியமித்திருக்கிறார்கள். இவரைத் தொடர்ந்து, கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை கிழக்கு மருதமலை சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு நா.கார்த்திக், கோவை மேற்கு பையாக்கவுண்டர் உள்ளிட்டோரின் பதவிகளுக்கும் ஆபத்து வரலாம் என்கிறார்கள். இவர்களுக்குப் பதிலாக மேட்டுப்பாளையம் டி.ஆர்.சண்முகசுந்தரம், குறிச்சி பிரபாகரன், டாக்டர் கோகுல், குனியமுத்தூர் முத்துசாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படலாம் என்கிறார்கள். இவர்களில் டிஆர்.சண்முகசுந்தரம், குறிச்சி பிரபாகரன் ஆகியோரும் தேர்தலில் நின்று தோற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.