போட்ட தீர்மானம் எங்கப்பா..?

By காமதேனு

அதிமுக தலைமையை ஆத்திரமூட்டும் விதமாக தொடர்ந்து ஆடியோ ரிலீஸ் செய்து கொண்டே இருக்கிறார் சசிகலா. அவரோடு அலைபேசியில் பேசும் அதிமுகவினரை அப்போதே கட்டம்கட்டி வரும் அதிமுக தலைமை, சசிகலாவை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றச் சொன்னது. அதன்படி பல மாவட்டங்களில் தீர்மானங்கள் போடப்பட்டன. ஆனால், சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் அதிகம் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்படிப் போடப்பட்ட தீர்மானத்தை வெளியில் காட்டாமல் ரகசியம் காக்கிறார்கள். இதையடுத்து மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கி இருக்கிறதாம் அதிமுக தலைமை. தங்களது சந்தேக வட்டத்துக்குள் இருக்கும் சிலரது மூவ்கள் குறித்து உளவுத்துறையில் உள்ள தங்களது விசுவாசிகள் மூலமாகவும் விசாரிக்கிறதாம் தலைமை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE