என்ன சார்... இப்டி பண்றீங்களே சார்!

By காமதேனு

பாஜகவின் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக மாநிலப் பொறுப்பில் இருக்கும் தென்மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி ஒருவர் மகளிரணி நிர்வாகி ஒருவரின் வீட்டை கட்சிப் பணிக்காக கேட்டு வாங்கினாராம். ஆனால், கட்சிப் பணியுடன் கசமுசா காரியங்களையும் அந்த வீட்டில் துணிந்து அரங்கேற்றுகிறாராம் தளபதி. இது தொடர்பாக சிலர் தலைமை வரைக்கும் புகார்களைத் தட்டிவிட்டும் தளபதி தன்னைத் திருத்திக்கொள்ளவில்லையாம். இதனால், அவருக்கு வீட்டைக் கொடுத்த அம்மிணி எப்படி அதை மீட்பது என்று தெரியாமல் தவிக்கிறாராம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE