நீட் தேர்வை ரத்து செய்ய 2 வழிகள்!- பீட்டர் அல்போன்ஸ் சொல்லும் யோசனை

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

காங்கிரஸ் கட்சியின் அறிவாளுமைகளில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், இப்போதெல்லாம் ராகுல் காந்தியைவிட ஸ்டாலின் புகழே பாடுகிறார். அரசின் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகள், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் குறித்து அவர் என்ன சொல்கிறார்? பேசலாம்.

திமுக தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் இருந்தன. ஆனால், கவர்னர் உரையில் 5 அறிவிப்புகள் கூட இல்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறாரே?

5 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறோம் என்பதற்குத்தான் தேர்தல் அறிக்கையே தவிர, 50 நாட்களில் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கல்ல. 4 ஆண்டுகளாக ஈபிஎஸ் மக்களுக்குக் கொடுக்காத நிவாரணத்தை, வெறும் 40 நாட்களில் ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, மாநிலத்தின் நிதி நிர்வாகத்தைச் சீர்செய்வதற்கான பெரிய முயற்சியை ஸ்டாலின் தொடங்கியிருக்கிறார். பல நிதி அதிகாரங்கள் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. அதை எல்லாம் திரும்பக் கேட்பதற்கான எவ்வித முயற்சிகளையும் கடந்த அரசு எடுக்கவேயில்லை. அரை வேட்டியை உருவும்போதுகூட அமைதியாக இருந்திருக்கிறது அதிமுக அரசாங்கம். அப்படிப்பட்ட சூழலில் இருந்து, எங்களுக்கான உரிமைகளைத் தாருங்கள் என்று கேட்பதற்கு ஒரு அரசாங்கம் வந்திருக்கிறது என்பதே மகிழ்ச்சிக்குரிய செய்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE