நீட் ரத்து முதல் பெட்ரோல் விலை குறைப்பு வரை... நிறைவேற்றாமல் நழுவுகிறதா திமுக?

By காமதேனு

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சியைப் பிடித்துவிட்டதாகத் திமுக மீது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. “பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்ற வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற முடியாது” என்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேட்டியும் அரசியல் களத்தை அனலாக்கியிருக்கிறது. நிறைவேற்ற முடியாத திட்டங்களைத் திமுக அறிவித்ததா?

செய்ததும் செய்யாததும்

திமுக ஆட்சிக்கு வித்திட்ட 1967 தேர்தலில் ‘3 படி லட்சியம் ஒரு படி நிச்சயம்’ என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதி முன்வைக்கப்பட்டது. அதிலிருந்துதான் தேர்தல் அறிக்கைகளுக்குக் கவனம் கிடைக்கத் தொடங்கியது. 2006 தேர்தலில் ‘தேர்தல் அறிக்கை’ தான் கதாநாயகன் என்று குறிப்பிடும் அளவுக்கு, ஏராளமான கவர்ச்சி வாக்குறுதிகளைத் திமுக தந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் இலவச கலர் டிவி உள்ளிட்ட சில திட்டங்களைத் திமுக நிறைவேற்றவும் செய்தது. ஆனால், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை திமுக சரிவர நிறைவேற்றவில்லை. அதற்கு, “55 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக அதிமுக அரசு தெரிவித்த புள்ளிவிவரத்தை நம்பித்தான் இந்தத் திட்டத்தை அறிவித்தோம்” என்று காரணம் சொன்னார் கருணாநிதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE