டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி: அலங்காரமா, அதிகாரமா?

By காமதேனு

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகியிருக்கிறார் திமுகவின் விவசாய அணிச் செயலாளரும் முன்னாள் எம்பி-யுமான ஏ.கே.எஸ்.விஜயன். மாநில அரசின் கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி இது. டெல்லிக்குத் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி ஏன் நியமிக்கப்படுகிறார்... இந்தப் பதவி எப்படி வந்தது என்று பார்க்கலாம்.

ஆரம்பித்துவைத்த எம்ஜிஆர்

டெல்லியில் உள்ள மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், திட்டங்களுக்கு நிதி உதவி பெறவும் பல்வேறு மாநில அரசுகள் ‘சிறப்புப் பிரதிநிதி’ என்ற பதவிகளைப் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கி, டெல்லிக்கான ஆட்களை நியமித்திருக்கின்றன. தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்ற பதவி எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோதுதான் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் பின்னணியில் ஓர் அரசியல் ஃப்ளாஷ்பேக் உண்டு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE