ஆபாச வார்த்தைகள்... அரட்டல் மிரட்டல்கள்!- ‘பப்ஜி’ மதன் பின்னணியில் ஆபாசப் பட நெட்வொர்க்?

By காமதேனு

கவி
readers@kamadenu.in

அன்றாடம் சமூக ஊடகங்களே கதியென கிடப்பவர்களுக்கே அதிர்ச்சி தந்திருக்கின்றன ‘பப்ஜி’ மதன் தொடர்பாக வெளியாகிவரும் தகவல்கள். இதுதொடர்பாக ஊடகச் செய்திகளில் பேசப்பட்ட பின்னர்தான், இப்படியும் அக்கிரமம் நடக்குமா என்று இணையத்துக்கு வெளியில் இருக்கும் சமூகம் உறைந்து நிற்கிறது!

சட்டவிரோத விளையாட்டு

‘பப்ஜி’ விளையாட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. ஆனாலும் மெய்நிகர் தனியார் இணையத்தைப் (VPN) பயன்படுத்தி இந்த விளையாட்டின் குளோபல் வெர்ஷனைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பதிவிறக்கம் செய்து இன்னமும் விளையாடி வருகிறார்கள். இவ்விளையாட்டில் திறமையாக இருக்கும் சிலர் தாங்கள் விளையாடுவதை நேரலையாக யூடியூபில் வெளியிடுகின்றனர். அதில் பிரபலமானவர்தான் மதன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE