கோ பேக் மோடி இப்ப எங்கே போச்சு?- பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டி

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

தமிழக பாஜகவில் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் பல ஆண்டுகளாக மாநிலப் பொருளாளர் பொறுப்பை வகித்துவருபவர் எஸ்.ஆர்.சேகர். கட்சித் தலைமை கொடுத்த பெரும் தொகையில் சத்தமில்லாமல் மாவட்டம்தோறும் கட்சிக்கென நிலம் வாங்கிவிட்டார். பல இடங்களில் பூமி பூஜைகள் போடப்பட்டு, உள்ளூர் ஸ்பான்சரில் கட்டுமானப் பணிகளும் நடக்க ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில் மோடி - மு.க.ஸ்டாலின் சந்திப்பை ஒட்டி, ‘கழகக் கலாச்சாரம்’ என்ற தலைப்பில், ‘Go Back Modi என தமிழகம் வந்த விருந்தினரை விரட்டிய ஸ்டாலின்’ என்றும், ‘காவிக் கலாச்சாரம்’ என்ற தலைப்பில், ‘Welcome Stalin என டெல்லி செல்லும் விருந்தினரை வரவேற்கும் மோடி!’ என்றும், ‘அன்று விபீஷணன் சரணாகதி. இன்று ஸ்டாலின் சரணாகதி’ என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் ட்விட்டரிலும் பதிவுகளை எழுதி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் எஸ்.ஆர்.சேகர். அவருடன் ஒரு பேட்டி:

விபீஷணனுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்?

விபீஷண சரணாகதியை சுக்ரீவன் சரணாகதி ஆக்கிவிட்டேன். விபீஷணனைப் பொறுத்தவரை அண்ணன் செய்யும் கெடுதல்களில் துணையாக இருக்க முடியாது என்று சொல்லி நல்ல விஷயத்துக்குத் துணை நின்று பின்னாளில் விபீஷண ஆழ்வாராக மாறினார். சுக்ரீவன்தான் அண்ணன் வாலியைக் காட்டிக்கொடுத்து துரோக அரசியல் செய்தவன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE