பணம் பறிக்கும் தனியார் பள்ளிகள்: தடுத்து நிறுத்துமா தமிழக அரசு?

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

பள்ளிகள் மாணவர்களுக்காகவே நடத்தப்படுகின்றன. கல்வியின் தாத்பரியமே அதுதான். ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்களில் பலர், தங்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காகவே மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும், தனியார் பள்ளி நிர்வாகிகள் பலர், தங்களுக்குக் கோடிகளைக் கொட்டிக்கொடுப்பதற்காகவே மாணவர்கள் பிறப்பெடுத்திருக்கிறார்கள் என்றும் கருதிக்கொள்கிறார்கள். பெற்றோர்களின் புகார்களுக்கும், புலம்பல்களுக்கும் தீர்வு கிடைக்காததைப் பார்க்கையில் அரசும் இதை எல்லாம் ஆமோதிக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கரோனா கொணர்ந்த துயரம்

கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், அந்தக் கல்வி ஆண்டை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், தனியார் பள்ளிகளோ எப்படியாவது பள்ளிக்கூடத்தைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தன. நடுத்தர வர்க்க, உயர் வர்க்கப் பெற்றோர்களும், பிள்ளைகளின் ஓராண்டுப் படிப்பு வீணாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பள்ளித் திறப்பை ஆதரித்தார்கள். ஏழைகளோ வருமானப் பற்றாக்குறையைப் போக்க தங்கள் பிள்ளைகளையும் கூலி வேலைக்கு அனுப்பிவிட்டார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE