திணறும் ராஜ கண்ணப்பன்

By காமதேனு

ராமநாதபுரம் மாவட்ட திமுகவை கால் நூற்றாண்டுக்கும் மேலாக தனது குடும்பச் சொத்தாகவே வைத்திருந்தார் சுப.தங்கவேலன். இந்த நிலையில், மாவட்டச் செயலாளராக இருந்த தங்கவேலனின் மகன் திவாகரனை மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை மாவட்டப் பொறுப்பாளாராக நியமித்தது திமுக தலைமை. இதனால் தங்கவேலனின் ஆதரவாளர்கள் முத்துராமலிங்கத்துடன் ஒட்டாமல் முரண்டு பிடித்தார்கள். இந்த நிலையில், முதுகுளத்தூர் தொகுதியில் ராஜ கண்ணப்பன் வேட்பாளராக நிறுத்தப்பட்டதுமே அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாம் தங்கவேலன் கோஷ்டி. போதாக்குறைக்கு, கண்ணப்பன் அமைச்சரும் ஆகிவிட்டதால் தங்கவேலன் கோஷ்டி தலை கால் புரியாமல் ஆடுகிறதாம். தாங்கள் கொடுக்கும் பத்திரிகை விளம்பரங்களில் மாவட்டப் பொறுப்பாளர் என்ற முறையில்கூட முத்துராமலிங்கத்தின் பெயரையோ படத்தையோ போடாமல் தைரியமாகப் புறக்கணித்து வருகிறது தங்கவேலன் கோஷ்டி. சொந்தக் கட்சிக்குள் நடக்கும் இந்த உரசலை சமாளிக்க முடியாமல் ரொம்பவே திணறுகிறாராம் கண்ணப்பன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE