எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
படையெடுப்புகள், போர்கள் எதுவானாலும் அவற்றில் மகளிரும், குழந்தைகளும்தான் அதிகம் இரையாகிறார்கள் என்பது வரலாறு. பெருந்தொற்றுக்கு எதிரான போரும் அதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக, குடும்ப அமைப்பு, வேலைபார்க்கும் நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மிகக் கொடுமையானவை.
கரோனா பரவலை முன்னிறுத்தி நிறுவனங்கள் ஆட்குறைப்பை அமல்படுத்தியதில் ஆண்களைவிட பெண் ஊழியர்களே அதிகம் இலக்கானார்கள். பெரும்பாலான துறைகளில் பெண்கள் பணியிழப்பது தொடர்கிறது.
முறிக்கப்படும் சிறகுகள்