ஒதுக்கப்படும் சென்னிதலா - உம்மன் சாண்டி!

By காமதேனு

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு உம்மன் சாண்டியும் ரமேஷ் சென்னிதலாவும் ஆளுக்கொரு பக்கம் கோஷ்டி கானம் பாடியதுதான் காரணம். இதனாலேயே இருவரையும் ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டு கோஷ்டியையும் சேராத சதீசனை எதிர்க்கட்சி தலைவராக்கியது காங்கிரஸ் தலைமை. இதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டிக்கும் சென்னிதலாவுக்கும் கடிவாளம் போட்டு கட்சியை காப்பாற்ற முடியாமல் திணறிய மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரனையும் வீட்டுக்கு அனுப்பியிருக்கும் காங்கிரஸ் தலைமை, அவருக்குப் பதிலாக சுதாகரனை மாநில தலைவராக உட்கார வைத்திருக்கிறது. இவராவது கோஷ்டிகளுக்கு கடிவாளம் போட்டு கட்சியைத் தூக்கி நிறுத்துகிறாரா என்று பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE