இரவல் சின்னத்தில் வெற்றிபெறும் மக்கள் பிரதிநிதிகள்!- யாரை ஏமாற்றுகின்றன அரசியல் கட்சிகள்?

By காமதேனு

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

சர்ச்சைகளுக்குப் பேர்போன பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவ்வப்போது ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கிளப்புவது வழக்கம். அவற்றில் ஒன்றாக, “பாபநாசத்தில், திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, திமுக எம்எல்ஏ-வாக எப்படி இருக்க முடியும்?” என்று எகிறியிருக்கிறார் எச்.ராஜா. தமிழகத்தில் இதுபோன்ற காட்சிகள் புதிதல்ல. எனினும், ஒரு கட்சியைச் சேர்ந்தவர் இன்னொரு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது நியாயமா எனும் கேள்வி, பலரது மனதில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

நடைமுறை என்ன?

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குச் சின்னங்களைத் தேர்தல் ஆணையமே ஒதுக்குகிறது. குறிப்பிட்ட கட்சிக்கு ஒதுக்கப்படும் சின்னத்தில், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். அதற்காகத்தான் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்குக் கட்சிச் சின்னத்தை ஒதுக்கும் ‘பி ஃபார்ம்’ என்ற உறுதியளிக்கும் சான்று நடைமுறையில் உள்ளது. ‘குறிப்பிட்ட வேட்பாளர் எங்களுடைய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்; அவருக்கு எங்கள் கட்சிச் சின்னத்தை ஒதுக்குங்கள்’ என்று கட்சித் தலைவர் கையொப்பமிட்டு வழங்கும் அத்தாட்சிதான் ‘பி ஃபார்ம்’. அதை ஏற்றுதான் கட்சி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு அக்கட்சியின் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE