பள்ளிக் கல்வியை படுகுழியில் தள்ளிய கரோனா!- கல்வியாளர் வே.வசந்தி தேவி பேட்டி

By காமதேனு

கே.சோபியா
readers@kamadenu.in

புரிந்தும் புரியாமலும், படித்தும் படிக்காமலும், தேர்வெழுதியும் எழுதாமலும் மாணவர்கள் ஜாலியாக அடுத்த வகுப்புக்கு வந்துவிட்டார்கள். ஓராண்டு பாழாகிவிட்டது, அடுத்த ஆண்டும் ஆன்லைன் கல்வி தானா? என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவலைப்படுகிறார்கள். இந்தச் சூழலில், கரோனா கால கல்விப் பாதிப்பு, அதில் இருந்து மாணவர்களை மீட்பது, வருங்காலத்தில் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க தலைவரும், முன்னாள் துணைவேந்தரும், இந்த கரோனா காலத்தில் வீதி வகுப்பறை என்ற திட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் செயல்படுத்தி வருபவருமான முனைவர் வே.வசந்திதேவியுடன் அலைபேசி வழியாக உரையாடினேன்.

கரோனா பரவல் கல்வித் துறையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதுகிறீர்கள்?

கரோனா இந்திய நாட்டின் உண்மையான முகத்தை, அதை மறைத்திருந்த திரைகளை எல்லாம் கிழித்துக் கொண்டு வெளிக்காட்டியிருக்கிறது. ஏற்கெனவே ஏற்றத்தாழ்வுகள் மிகுந்திருந்த கல்வித் துறையில், அந்த ஏற்றத்தாழ்வுகளை இன்னும் கூடுதலாக ஆழப்படுத்தியிருக்கிறது. இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது, வழக்கம் போல அடித்தட்டு, விளிம்புநிலை மற்றும் பட்டியலின, பழங்குடியின குழந்தைகள் தான். அவர்களின் கல்வி மட்டுமல்ல உணவு, ஊட்டச்சத்து போன்றவற்றிலும் பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE