துர்நாற்றம் வந்தால் ஜன்னலைச் சாத்துகிறவள் அல்ல... நான் அதைச் சுத்தம் செய்யப் புறப்படுபவள்!- வாள்வீசும் வானதி சீனிவாசன்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

பாஜகவின் 4 சட்டப்பேரவை உறுப்பினர்களில் வானதி சீனிவாசனின் பெயரே பத்திரிகைகளில் அதிகம் தென்படுகிறது. மேற்கு வங்க போராட்டம், உள்ளூர் ரேஷன் கடை, இணையம் என்று எல்லா இடங்களிலும் அரசியல் செய்கிறார். காமதேனுவுக்காக அவருடன் உரையாடியதில் இருந்து...

மோடி அரசு 7 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஆட்சியின் முக்கியமான பணிகள், சாதனைகள் என்று எதைச் சொல்வீர்கள்?

இந்த 7 வருடக் காலத்தை நான் இரண்டு விதமாப் பார்க்கறேன். ஒன்று, மிக முக்கியமான நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தது. இரண்டு, யார் பயனாளிகளோ அவர்களுக்கான மானியம் முழுமையாக அவர்களைச் சென்று சேர்வதற்கான நடவடிக்கையை எடுத்தது. இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்து ஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனைகளைச் செய்திருக்கிறது இந்த அரசு. ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே போனால் பக்கங்கள் போதாது. உள்நாட்டுப் பாதுகாப்பில் தொடங்கி, குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என்று ஒவ்வொரு துறையிலும் இந்த நாடு அடுத்த 20 ஆண்டுகளில் எப்படியிருக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டு பல்வேறு முயற்சிகளை எடுத்திருத்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE