யானை சவாரி செய்த பெரிய புராண உரை!- சிதம்பரத்தில் கவுரவிக்கப்பட்ட சி.கே.எஸ்

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

12-ம் நூற்றாண்டில் சேக்கிழாரையும், அவர் பாடிய திருத்தொண்டர் புராணத்தையும் தில்லை நடராஜர் சந்நிதியில் யானை மீதேற்றி, தானும் அதில் ஏறிக்கொண்டு பின்னிருந்து கவரி வீசி மகிழ்ந்தான் மாமன்னன் அநபாயன். இது வரலாறு. ‘பெரிய புராணம்’ என்று அழைக்கப்படும் இதே திருத்தொண்டர் புராணத்துக்கு எழுதப்பட்ட ஓர் உரையும் யானையின் மீது ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்ட வரலாற்றைத் தமிழகம் கண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மரியாதைக்குச் சொந்தக்காரர் கோவையைச் சேர்ந்த சி.கே.எஸ் எனப்படும் சி.கே.சுப்பிரமணிய முதலியார்.

ஏழு தொகுதிகள், 7,300 பக்கங்களைக் கொண்ட அந்த உரை, இன்றுவரை மக்களின் பேராதரவுடன் விற்பனையாகி வருகிறது. கோவை வைசியாள் வீதியில் இருக்கும் சி.கே.எஸ் இல்லம், வ.உ.சி, உ.வே.சா, ரசிகமணி டி.கே.சி போன்றவர்கள் வந்து தங்கிய பெருமை கொண்டது. சி.கே.எஸ்ஸின் மூன்றாவது தலைமுறையினரால் அந்த இல்லம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றேன்.

மடிக்கணினி சகிதம் என்னை வரவேற்ற சி.கே.எஸ்ஸின் பேரன் சிவசுப்பிரமணியம், தனது தாத்தாவின் பெருமை
களைச் சொல்லத் தொடங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE