ரசிகர்கள் தான் எனக்கு எனர்ஜி டானிக்!- ‘தாலாட்டு' ஸ்ருதி ராஜ் பேட்டி

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

“இது ரொம்பவே பாதுகாப்பா இருக்க வேண்டிய தருணம். நான் பார்க்கும்போது யாராவது மாஸ்க் போடாமல் இருந்தாங்கன்னா கட்டாயம் மாஸ்க் போடுங்கன்னு அறிவுறுத்துவேன். நீங்களும் சொல்லுங்க” சமூக விழிப்புணர்வுடன் நம்மிடம் பேசத் தொடங்கினார் ஸ்ருதி ராஜ். சன்டிவியில் ஒளிபரப்பாகும் ‘தாலாட்டு' தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் அவரிடம் இன்னும் கொஞ்சம் பேசினோம்.

கரோனா சமயத்துல நீங்க எந்த அளவுக்குப் பாதுகாப்பா இருக்கீங்க?

 முதல்தடவை கரோனா தாக்கம் அதிகமா இருக்குன்னு தான் ‘அழகு' சீரியலில் இருந்து விலகினேன். முதல் அலையை விட இப்போ இரண்டாவது அலை ரொம்பவே தீவிரமா இருக்கு. அரசாங்கமும் மக்கள் பாதுகாப்பா இருக்கணும்னு தொடர்ந்து வலியுறுத்திட்டே இருக்காங்க. ஆனா, சிலர் இன்னும் கரோனாவுடைய தீவிரத்தை உணரலைங்கிறத பார்க்கும்போது ரொம்பவே வருத்தமா இருக்கு. நாம மட்டுமில்லாமல் நம்ம குடும்ப உறுப்பினர்களும் நம்மால பாதிக்கப்படக் கூடாதுங்கிறதை எப்பவும் மனசுல வைச்சிக்கணும். நான் வெளியில் போற போது கட்டாயம் மாஸ்க் போட்டுட்டு தான் போவேன். யாராச்சும் மாஸ்க் போடாம எதிர்ல வந்தா கண்டிப்பா, “மாஸ்க் போடுங்க”ன்னு சொல்றேன். அப்படி சொல்றதனால சிலருக்கு என் மேல கோபம் கூட வந்திருக்கு. ஒவ்வொருத்தரும் பாதுகாப்பா இருக்கணும். அப்போ தான் இந்த வைரஸை ஒழிக்க முடியும். நான் கஷாயம் குடிக்கிறது, ஆவி பிடிக்கிறது, சத்தான உணவுகள் சாப்பிடுறதுன்னு ரொம்பவே பாதுகாப்பா இருக்கேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE