வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
இயற்கையின் அமைதி உறைந்திருக்கும் லட்சத்தீவு இன்றைக்குத் தகித்துக்கொண்டிருக்கிறது. சூறை மீன்களைப் பிடித்துக்கொண்டும், சுற்றுலாவைக் கவனித்துக்கொண்டும், சுத்தமான கடற்கரைக் காற்றைச் சுவாசித்துக்கொண்டும் இருந்த லட்சத்தீவு மக்கள் இன்றைக்கு அரசியல் நெடி அடிக்கும் சூறாவளிக்கு நடுவில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் பதற்றம் தொற்றிக்கொள்ள என்ன காரணம்?
நிர்வாக ரீதியில் மூன்று அடுக்குகளைக் கொண்டது லட்சத்தீவு. ஒரு மக்களவை உறுப்பினர் இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டாவது அடுக்கில் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த அடுக்கில் மூன்றாவதாக இடம்பெறுபவர் நிர்வாகி. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இவர் வசம் முக்கியப் பொறுப்புகள் உள்ளன. இதுவரை ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகள்தான் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுவந்தனர். கடைசியாக இங்கு நிர்வாகியாக இருந்த தினேஷ்வர் சர்மாவும் ஐபிஎஸ் அதிகாரிதான். 2020 டிசம்பர் 4-ல் அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, முதன்முறையாக ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரி அல்லாதவரும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவருமான பிரஃபுல் படேல் இங்கு நிர்வாகியாகக் கொண்டுவரப்பட்டார். இதையடுத்தே பிரளயங்கள் வெடித்தன.
யார் இந்த பிரஃபுல் படேல்?