ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
ரவுடிகளின் பிடியில் இருக்கும் மூன்று பெண்களைக் காப்பாற்ற வருகிறார் கதாநாயகன். தன்னைத் தாக்க முற்படும் ஒவ்வொருவரையும் அடித்துப் பறக்கவிடுகிறார். ஸ்லோ மோஷன் ஆக் ஷனில் காட்சிகள் அதிர்கின்றன. பின்னணி இசை வேறு பட்டையைக் கிளப்புகிறது. அச்சு அசலாக சினிமா சண்டைக் காட்சிபோல படம் பிடிக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிகளில் தோன்றும் அத்தனை பேரும் சிறுவர்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். ‘சினிமாவை மிஞ்சும் ஃபைட் சீன் / 2கே கிட்ஸ் வீடியோ’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் உலாவரும் இந்த வீடியோ பெரிய அளவில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது.
இந்த வீடியோவைப் பின்தொடர்ந்து மேற்கொண்டு தேடிப் பார்த்தால் மேலும் பல சண்டைக் காட்சிகள் வெவ்வேறு பாணியில் சிறுவர்களைக் கொண்டு படம் பிடிக்கப்பட்டு வருவது தெரிகிறது. இவற்றைக் கண்டு ‘களித்து’ பலர் இந்தச் சிறுவர்களை உசுப்பேற்றும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிடுவதையும் காண முடிகிறது. வன்முறை நிறைந்த திரைப்படக் காட்சிகளைக் குழந்தைகளும் சிறுவர்களும் காண்பதே தவறு என்கிற நிலை போய் வன்முறையைச் சிறுவர்களே மீட்டுருவாக்கம் செய்து நடிக்கும் போக்கு எங்கே இட்டுச் செல்லும் என்கிற கவலையை இது ஏற்படுத்தி உள்ளது. ஒரு புறம் இந்த காலத்துச் சிறுவர்கள் இப்படித்தான் என்று எளிதாகக் கடந்து செல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், மறுபுறம் இது விபரீதமான விளைவுகளை சமூகத்தில் உண்டாக்கும் என்கிற கவலை மிகுந்த குரல்களும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளன.
சுயமோகத்தின் விளைவு