பள்ளிகளில் பாலியல் குற்றங்கள்!- களையெடுக்க வழி என்ன?

By காமதேனு

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

சமூகப் பொறுப்பு மிக்க ஆசிரியப் பணியை மேற்கொள்ள வேண்டியவர்கள், மாணவிகளிடமே பாலியல் குற்றத்தில் ஈடுபடும் கொடுமை ஜீரணிக்கவே முடியாதது. சென்னை பத்ம சேஷாத்திரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில், 27 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த ஆசிரியர் ராஜகோபாலன் (57) செய்திருக்கும் குற்றங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

மாணவிகளிடம் அநாகரிகமாகப் பேசுதல், வாட்ஸ்-அப் வழியாகப் பாலியல் உணர்வைத் தூண்டும் விதமாகக் குறுஞ்செய்திகளைப் பகிர்தல், அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்புமாறு மாணவிகளிடம் சொல்லுதல், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பு நடத்துதல் போன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக ராஜகோபாலன் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டம், தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மேலும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் கொடுத்துவரும் பாலியல் துன்புறுத்தல்களை மாணவர்களும் பெற்றோர்களும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, விவாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பணிச்சூழலில் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளைப் பொதுவெளியில் பெண்கள் போட்டுடைத்த ‘மீடூ’ இயக்கம்போல் கல்வி நிறுவனங்களில் நிகழ்த்தப்பட்டுவரும் பாலியல் அத்துமீறல்களையும் வெட்டவெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற குரல் வலுவாக எழுந்துள்ளது. இவை குறித்து சமூக ஆர்வலர்கள் சிலருடன் பேசினோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE