கனிவான பாராட்டு... கவனிக்கப்படும் கோரிக்கைகள்!- ஈபிஎஸ்ஸை வீழ்த்த திமுகவை நெருங்குகிறாரா ஓபிஎஸ்?

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஈபிஎஸ்., ஓபிஎஸ்., இருவருக்குமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், ஓபிஎஸ் மட்டுமே பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரோனா தடுப்பு கூட்டத்தில், ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு திமுக எம்எல்ஏ-க்கள் ஒரு அமைச்சருக்குரிய மரியாதையைக் கொடுத்தது பேசு பொருளானது. அதேபோல ஓபிஎஸ்ஸின் தம்பி மறைவுக்கு தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தேனி மாவட்ட திமுகவினர் தொண்டர் படையோடு போய் இரங்கல் தெரிவித்துவிட்டு வந்தது, அரசியல் பார்வையாளர்களின் புருவங்களை உயர வைத்தது. தனக்கு ஆறுதல் சொன்னவர்களுக்கு நன்றி தெரிவிவித்த ஓபிஎஸ், முதலில் ஸ்டாலின் பெயரையும், இரண்டாவதாக ஈபிஎஸ் பெயரையும் சொன்னதும் கவனிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், கடந்த 26-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி நடத்திய கரோனா ஆய்வுக்கூட்டத்தில் ஓபிஎஸ்ஸே வந்து கலந்துகொண்டார். பின்னணியில் மு.க.ஸ்டாலின், கருணாநிதி படங்கள், டேபிளில் கருணாநிதி படம் சகிதம் திமுக அமைச்சர், எம்எல்ஏ-க் கள் புடைசூழ ஓபிஎஸ். அமர்ந்திருக்கும் அந்தப் புகைப்படம் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. திமுகவுடன் அன்கோ போடுகிறாரா ஓபிஎஸ் என்பதே அந்த விவாதத்தின் மையம்.

எதிர்க்கட்சித் தலைவர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE