வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்வதில் மோடி அரசு தவறிவிட்டதாகப் பல முனைகளிலிருந்து விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் மோடி அரசை விமர்சித்ததாக எழுந்த சர்ச்சை பேசுபொருளாகி யிருக்கிறது. மே 15-ல் நடந்த ‘பாசிட்டிவிட்டி அன்லிமிட்டட்’ எனும் இணையச் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய மோகன் பாகவத் பேசிய வார்த்தைகள், சங்கப் பரிவார அமைப்புகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
வருத்தத்தில் வலதுசாரிகள்
கரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் பாஜக எதிர்ப்பாளர்களிடம் மட்டுமல்லாமல், மோடியின் தீவிர ஆதரவாளர்கள் மத்தியிலேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா தொற்றுக்குள்ளாகி மரணத் தறுவாயில் இருக்கும் தங்கள் உறவினர்களைக் காப்பாற்ற மோடியிடமும் மத்திய அமைச்சர்களிடமும் உதவிகோரி ஏமாற்றமடைந்த மோடி ஆதரவாளர்கள் பலர் மனக்கசப்பை வெளிக்காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அனுபம் கெர் போன்ற மோடியின் அதி தீவிர ஆதரவாளர்கள்கூட மத்திய அரசை வெளிப்படையாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.