கி.ராஜநாராயணன்: காலத்தைச் சித்தரித்த கதைசொல்லி

By காமதேனு

ஜெய்
jeyakumar.r@hindutamil.co.in

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என அழைக்கப்பட்ட கி.ராஜநாராயணன் காலமாகிவிட்டார். 99 வயதில் மரித்த கி.ரா-வை நமது வரலாற்றின் ஒரு நூற்றாண்டுக் கால ஆவணம் எனச் சொல்லலாம். கரிசல் இலக்கியம் எனப் பின்னால் வகைப்படுத்தப்பட்ட இலக்கியத்தைத் தோற்றுவித்தவர். நெல்லைக்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட இந்தக் கரிசல் பிரதேசம் தனி பாஷையைக் கொண்டது. இந்த நிலத்தின் பிரத்யேகமான மொழியை, வரலாற்றைத் தன் கதைகள் மூலம் சித்தரித்தவர் கிரா.

வெள்ளந்தி மொழி

கி.ரா-வின் கதைகள் மிகப் பெரிய வாசக கவனம் பெறுவதற்கான காரணம், அவரது எழுத்தில் வெளிப்படும் வெகுளித்தனம். குழந்தைகளின் வெகுளித்தனத்துக்கு ஒப்பானது அது. அவரது சிறந்த சிறுகதைகள், குழந்தைகளின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருப்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவரது ‘கதவு’ சிறுகதையில் வீட்டுக் கதவைப் பேருந்தாகப் 
பாவித்துக் குழந்தைகள் 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE