கல்யாண சமையல்... காற்றோட்டக் குளியல்!- இப்படியும் வாழப் பழக்கிய கரோனா

By காமதேனு

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

அச்சத்திலும் சோகத்திலும் அனைவரையும் ஆழ்த்தியிருக்கும் இந்தக் கரோனா காலத்தில் எங்காவது ஒரு நம்பிக்கை கீற்று தென்படாதா என்றே மனம் ஏங்கி தவிக்கிறது. அப்படியொரு காட்சி அண்மையில் கண்முன் விரிந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் பெரும்பான்மை மக்கள் சொந்த ஊரைவிட்டு பிழைப்புக்காக வந்தவர்களே. அவர்களில் எண்ணற்றவர்களைத் தங்களுடைய கிராமங்களைத் தேடிச் சென்று ஒன்றுகூடி வாழ கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறது இந்தப் பேரிடர் காலம்.

கிராமங்கள் பாதுகாப்பானவை என்கிற உள்ளுணர்வின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து சென்றவர்களில் ஒருவர், திண்டிவனத்தில் கல்லூரிப் பேராசிரியையாக பணிபுரிந்துவரும் முனைவர் கனிமொழி. சிதம்பரம் அருகில் உள்ளது சிவபுரி கிராமம். கடந்த சில வாரங்களாக இங்கு தன்னுடைய உறவினர்களான 43 பேருடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துவரும் விலைமதிப்பற்ற தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பேராசிரியை கனிமொழி.

கிராமத்தில் பத்திரமாக வாழ்வோமே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE