சமயம் வளர்த்த சான்றோர் 22: பகவான் ரமணர்

By காமதேனு

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீரமண ஆசிரமத்தை நிறுவி, எண்ணற்ற சேவைகள் புரிந்தவர் ரமண மகரிஷி. அத்வைத வேதாந்த நெறியை பலருக்கும் போதித்து வந்தவர் ரமணர். குருவின் குணம், பொறுப்பு, மன வலிமை, சுய சீர்திருத்தம், சகோதரத்துவம், மவுன விரதம், மூச்சுப் பயிற்சி, ‘நான்’ என்பதை ஒழித்தல் ஆகியவற்றை அனைவரிடத்தும் கூறி அவர்களை நெறிப்படுத்த அரும்பாடுபட்டவர். இவரது இயற்பெயர் வெங்கட்ராமன்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுந்தரம் ஐயர் – அழகம்மாள் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு  மூன்று மகன்கள்; ஒரு மகள். மூத்த மகன் நாகசுவாமி. இரண்டாவது மகனான வெங்கட்ராமன் 1879 டிசம்பர் 30-ல் பிறந்தவர். 1881-ல் மூன்றாவது மகன் நாகசுந்தரம் பிறந்தார்.  

தெய்வ பக்தியும் தர்ம சிந்தனையும் உடைய சுந்தரம் ஐயர் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். நான்காவதாக அலமேலு என்ற பெண் குழந்தை பிறந்ததும் குடும்பம் மகிழ்ச்சியில் சூழ்ந்தது. உரிய வயதில் குழந்தைகள் அனைவரும் பள்ளி செல்லத் தொடங்கினர்.  இரண்டாவது மகன் வெங்கட்ராமன், முதலில் உள்ளூர் பள்ளியில் சேர்க்கப்பட்டு, பின்னர் திண்டுக்கல் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கே அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் (1892-ம் ஆண்டு) சுந்தரம் ஐயர் இறைவனடி சேர்ந்தார்.  

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE