தொகுப்பு: ஜெ.சரவணன்
கரோனா காலத்தில் பலருக்கு திறமையை வளர்த்துக்கொள்ளவும் வருமானம் ஈட்டவும் பயனுள்ளதாக சமூக வலைதளங்கள் இருந்துவருகின்றன. அதேசமயம் சமூக வலைதளங்களில் கிடைக்கும் புகழுக்கு மயங்கி சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படித்தான் சமீபத்தில், 16 வயது சிறுவன், 14 வயது சிறுமி இடையேயான காதல் மிகுந்த வைரலானது. இவர்களுக்குள் சாதாரணமாக ஆரம்பித்த சமூக வலைதளப் பேச்சு வீடு வரைக்கும் போக வைத்தது. சிறுவர்கள்தானே என்று பெற்றோர்களும் அவர்கள் இஷ்டப்படி இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் பதிவிட அனுமதித்திருக்கிறார்கள். ஒருநாள் சிறுவன், அந்த சிறுமியைக் காதலிப்பதாகச் சொல்லி, நெஞ்சில் டாட்டூ குத்திக்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளான். சிறுமியின் தாயை சிறுவன் அத்தை என்று அழைப்பதும், சிறுமியை சிறுவனின் தாய் மருமகள் என்று அழைப்பதுமாக வீடியோக்கள் வந்தன. அதன் பிறகுதான் விபரீதம் புரிந்திருக்கிறது. இந்த விஷயமெல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானதால் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் களத்தில் இறங்கி இவர்களை எச்சரிக்கை செய்துள்ளனர். அதன்பிறகே அந்தச் சிறுமி, “இன்ஸ்டாகிராம் புகழுக்காக இப்படி தவறு செய்துவிட்டேன், இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டேன்” என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
**********************
கரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அதிமுக தலைமை அறிவிப்பு.
பத்துவருஷ ஆட்சியில் இருந்தீங்க... இவ்வளவுதானா??- அஜ்மல் அரசை