கர்ப்பிணி மருத்துவரை காவுகொண்ட கரோனா!- பெருந்தொற்றின் பேரவலம்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

மதுரை அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய கர்ப்பிணி டாக்டர் சண்முகப்பிரியாவின் மரணம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள் ளாக்கி இருக்கிறது. கூடவே, அரசின் கருணைப் பார்வையையும் மருத்துவர்களின்பால் ஈர்த்திருக்கிறது.

தன் தாயார் பிரேமா அரசு செவிலியர் என்பதால், அவரைப் பார்த்தே மருத்துவராக வேண்டும் என்று திட்டமிட்டுப் படித்தவர் சண்முகப்ரியா. இவரது பூர்விகம் மதுரை என்றாலும், தாய் தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் தங்கி அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியதால், சண்முகப்ரியா பிறந்து வளர்ந்தது எல்லாமே அங்கே தான். பள்ளிப் பருவத்திற்கே உரிய கொண்டாட்டங்களை எல்லாம் தள்ளிவைத்துவிட்டுப் படித்தார் சண்முகப்ரியா. அவர் நினைத்தபடியே மதுரை மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் சீட் கிடைத்தது. படிப்பை முடித்ததும் தேனி மாவட்டம் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது. மற்ற மருத்துவப் பணியாளர்களைப் போல அங்கிருந்து நகர்ப்பகுதிக்கு இடமாற்றம் பெற முயற்சிக்காமல், 8 ஆண்டுகள் தொடர்ந்து அங்கு பணியாற்றி பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இதன் பிறகு காதல் திருமணம் செய்து, மதுரைக்கு இடமாற்றமாகி வாழ்க்கையைத் தொடங்கினார்.

கர்ப்பிணியாக இருந்ததால் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.  “கரோனா காலமாக இருக்கிறது, பேசாமல் பிரசவ விடுப்பு எடுத்துக்கோ என்று நாங்கள் சொன்னோம். அதற்கு அவர், பிரசவத்துக்குப் பிறகு விடுப்பு எடுத்தால்தான் குழந்தை பராமரிப்புக்குச் சரியாக இருக்கும் என்று கூறிவிட்டார். அதற்குள் இப்படியாகிவிட்டது என்கிறார்கள்” அவரது உறவினர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE