‘கட்சியை தெருவுல கொண்டாந்து நிறுத்திட்டாங்க!’- சசிகலா தரப்பிடம் ஆதங்கப்பட்ட ஓபிஎஸ்

By காமதேனு

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

தேர்தலுக்கு முன்பு அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் போட்டியில் பின் தங்கிய ஓபிஎஸ், இப்போது எதிர்க்கட்சி தலைவர் போட்டியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். எதிர்பார்த்தபடியே இம்முறையும் கட்டுக்கோப்பாய் இருந்து காரியமாற்றி நினைத்ததைச் சாதித்திருக்கிறது கொங்கு அணி!

கொங்கு மண்டலத்து எம்எல்ஏ-க்களை மட்டுமல்லாது தென் மண்டலம் உட்பட முக்குலத்தோர் எம்எல்ஏ-க்களையும் தன்பக்கம் நிற்கவைத்ததன் மூலம் மீண்டும் தனது ராஜதந்திரத்தை நிரூபித்திருக்கிறார் எடப்பாடியார். 7-ம் தேதி நடந்த அதிமுக எம்எல்ஏ-க்
கள் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் அல்லாத சிலரும் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களைச் சொன்னார்களாம். முன்னாள் அமைச்சர் வளர்மதி, “நீங்க கொஞ்சம் விட்டுக்குடுத்துப் போகலாமே” என்றாராம். இதைக் கேட்டு சூடான ஓபிஎஸ், “நீங்க  உள்ள வந்து உக்காந்ததே தப்பு. நீங்களெல்லாம் புத்தி சொல்லி கேட்கிற நிலையில நான் இல்லை. தயவு செஞ்சு வெளியில போயிருங்க” என்றாராம்.

ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் ஆளுக்கொரு அறையில் அமர்ந்திருக்க, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தான் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டே இருந்தார்களாம்.  “அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டால் நான் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். மற்றபடி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பெல்லாம் எனக்கு தேவையில்லை” என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லி இருக்கிறார் ஓபிஎஸ். இதனால் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமலே முதல் கூட்டம் கலைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE