சீனியர்களுக்கு முக்கியத்துவம் இல்லையா?- அதிருப்தியில் மூத்த அமைச்சர்கள்

By காமதேனு

சோபியா
readers@kamadenu.in

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்" என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒலித்தேவிட்டது. "ராசியில்லாதவர், கட்டம் சரியில்லாதவர், அதற்குச் சரிப்பட்டு வரமாட்டார்" என்றெல்லாம்  விமர்சித்த பாஜக, அதிமுக தலைவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு தமிழ்நாட்டின் 13-வது முதல்வராக பதவியேற்றிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அமைச்சரவையின் சிறப்புகள்

மு.கருணாநிதியின் அமைச்சரவை சகாக்களான துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்டோரும், ஜெயலலிதாவின் அமைச்சரவை சகாக்களாக இருந்த முத்துசாமி, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி, ரகுபதி உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றிருக்கிறார்கள். இளைஞர்களில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிர்பார்க்கப்பட்டபடியே நிதித்துறை வழங்கப்பட்டிருக்கிறது. 36 வயதே ஆன மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சராகியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE