என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்வாகியிருக்கும் நான்கு பாஜக உறுப்பினர்களில் அதிகம் கவனம் ஈர்த்திருப்பவர் நாகர்கோவிலில் வெற்றி பெற்றிருக்கும் எம்.ஆர்.காந்தி. எளிமையான பின்னணியிலிருந்து வந்த இவர், செல்வாக்கு மிக்க திமுக வேட்பாளரான சுரேஷ்ராஜனை வீழ்த்தி இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். இதன்மூலம் தமிழகத்தில் தாமரையை மலரவைக்க படாதபாடு பட்டுவந்த பாஜக தலைவர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்!
“33 வயதிலேயே அமைச்சராகி திமுக அமைச்சரவையில் இளையவர் என கொண்டாடப்பட்டவர் சுரேஷ்ராஜன். சுற்றுலாத் துறை அமைச்சராக இவர் இருந்தபோதுதான் குமரியில் முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டது. மு.க.ஸ்டாலினின் தென்மண்டலப் போர்ப்படைத் தளபதிகளில் முக்கியமானவராக இருக்கும் சுரேஷ்ராஜன் பத்து ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தவர். திமுகவின் மாவட்டச் செயலாளராக இருக்கும் சுரேஷ்ராஜனை எளியவரான எம்.ஆர்.காந்தி வீழ்த்தியிருக்கிறார்” என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால், சுரேஷ்ராஜனே ஓரளவு எதிர்பார்த்த முடிவுதான் இது!
மூத்த தலைவர்