எஸ். ஆல்பர்ட்: நவீன இலக்கியத்தின் டி.கே.சி

By காமதேனு

ஜெய்
jeyakumar.r@hindutamil.co.in

நவீனத் தமிழ் இலக்கியத்தின் சிந்தனைப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கிய பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் கடந்த வாரம் பெங்களூருவில் காலமாகிவிட்டார்.

நவீன இலக்கியக் காதலர்

பழந்தமிழ் இலக்கியத்தின் பள்ளியாகத் திகழ்ந்தவர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார். இவர் தமிழ் அறிஞர்கள் பலர் உருவாகக் காரணமாக இருந்தவர். டி.கே.சி போல் நவீனத் தமிழ் இலக்கியத்தின் சிந்தனைப் பள்ளியாக விளங்கியவர் ஆல்பர்ட் எனலாம். எழுத்தாளர்கள் எம்.டி.முத்துக்குமாரசாமி, வெளி ரங்கராஜன், இமையம், ராஜன்குறை, கோ.ராஜாராம், நாகூர் ரூமி, திரைப்பட இயக்குநர்கள் அம்ஷன் குமார், ஜே.டி.ஜெர்ரி போன்றோர் இவரது கலந்துரையாடல்களால் உருவான ஆளுமைகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE